தெ.ஆ பவுலர், பேட்ஸ்மேன், பீல்டர்: ஐபிஎல் போட்டியில் ஒரு தற்செயல் சுவாரஸ்யம்

பெங்களூருவில் கோலி தலைமை ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும், ஷ்ரேயஸ் அய்யர் தலைமை டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும் இடையே ஐபிஎல் 2019-ன் 20-வது மேட்ச் நடைபெற்று வருகிறது.

இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி அன்று கொல்கத்தா சேஸ் செய்ததை வைத்து முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தது.

விராட் கோலி, பார்த்திவ் படேல் இறங்கினர், இதில் பார்த்திவ் படேல் 9 ரன்களுக்கு கிறிஸ் மோரிஸ் பந்தில் கேட்ச் ஆகி ஏமாற்றமளித்தார்.

விராட் கோலி தன் முதல் ஷாட்டிலேயே கேட்ச் ஆகியிருப்பார், ஆனால் கிறிஸ் மோரிஸ் வீசிய பந்து எட்ஜ் ஆகி ஸ்லிப்பில் தவணுக்குத் தள்ளிச் சென்று பவுண்டரி ஆனது, ஆனால் அதன் பிறகு கோலி நிலைத்து ஆடி 18 ரன்களுடன் கிரீசில் இருக்கிறார்.

பார்த்திவ் அவுட் ஆனவுடன் டிவில்லியர்ஸ் களமிறங்கினார். முதலில் கிறிஸ் மோரிசின் ஷார்ட் பிட்ச் பந்தை மிட்விக்கெட் மேல் செந்தூக்கு தூக்கி சிக்ஸ் அடித்தார், பிறகு இஷாந்த் சர்மா பந்தை நடந்து வந்து கவர் திசையில் அருமையான பவுண்டரி அடித்து நன்றாக 17 ரன்களில் ஆடி வந்தார்.

அப்போது சக தென் ஆப்பிரிக்கா வீரரும் வேகப்புயலுமான ரபாடா வீச வந்தார். அந்த ஓவரின் கடைசி பந்தை ரபாடா வேகமாக ஓடி வந்து மெதுவாக வீசினார் டிவில்லியர்ஸ் நேராக தூக்கினார், ஆனால் பந்து மட்டையின் அடியில் பட்டதால் தொலைவு செல்லாமல் லாங் ஆனில் இங்ரமிடம் கேட்ச் ஆனது, பின்னால் சில அடிகள் பின்னால் ஓடி கேட்ச் எடுத்தார்.

அதாவது பந்து வீசியதும் தென் ஆப்பிரிக்காவின் ரபாடா, பேட்ஸ்மேனும் தென் ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ், கேட்ச் எடுத்த இங்ரமும் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர். இந்த தற்செயல் சுவாரஸ்யம் ஐபிஎல் கிரிக்கெட்டில் இதற்கு முன்பாக நடந்திருக்கிறதா என்பதை பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.

Google+ Linkedin Youtube