ராகுல் போட்டியிடும் வயநாடுக்கு பிரச்சாரத்துக்காகப் புறப்படும் புதுச்சேரி காங்கிரஸார்

ராகுல் போட்டியிடும் வயநாடுக்கு பிரச்சாரத்துக்காக புதுச்சேரி காங்கிரஸார் புறப்படுகின்றனர்.

புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் 18-ம் தேதி நிறைவடைந்தது. இந்நிலையில், கேரளத்தில் வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். ராகுலுக்கு வாக்கு சேகரிக்க புதுச்சேரி காங்கிரஸார்  வயநாடு புறப்படுகின்றனர்.

இதுதொடர்பாக புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி தரப்பில் கூறுகையில், "மாநில காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான நமச்சிவாயம் தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் கேரள வயநாடு தொகுதியில் பிரச்சாரம் செய்யப் புறப்படுகின்றனர். மக்களவைத் தேர்தல் புதுச்சேரியில் முடிந்துள்ளது. கேரளத்தில் 23-ல் தேர்தல் நடக்கிறது. தேர்தல் பிரச்சாரம் 21-ம் தேதி மாலை நிறைவடையும்.

அதற்காக இன்று (வெள்ளிக்கிழமை) புதுச்சேரியிலிருந்து வயநாடுக்கு காங்கிரஸார் புறப்படுகின்றனர். புதுச்சேரியில் இருந்து செல்லும் கட்சியினர் 20, 21-ம் தேதிகளில் இரு நாட்கள் வயநாடு தொகுதியில் பிரச்சாரம் செய்வார்கள்" என்று குறிப்பிட்டனர்.

Google+ Linkedin Youtube