இரண்டு குறைந்த தூர ஏவுகணைகளை மீண்டும் சோதனை செய்து அமெரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்த வடகொரியா

சியோல்,

வடகொரியாவின் வடக்கு பியாங்கன் பகுதியில் குறைந்த தொலைவு செல்லக்கூடிய இரு ஏவுகணைகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.  இவை 270 மற்றும் 420 கி.மீட்டர் தொலைவுக்கு பறந்து சென்றுள்ளன என தென்கொரியா தெரிவித்துள்ளது.

இதுபற்றி அமெரிக்கா மற்றும் தென்கொரியா ஆகிய இரு நாடுகளின் ராணுவத்தினர் கூட்டாக ஆய்வு செய்து வருகின்றனர்.  கடந்த ஒரு வாரத்திற்குள் 2வது முறையாக நடத்தப்படும் ஏவுகணை சோதனை என தென்கொரிய ராணுவம் தெரிவித்து உள்ளது.

அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை பரிசோதனைகளை நிறுத்துவதற்காக அமெரிக்க அதிபர் டிரம்புடன், வடகொரிய அதிபர் கிம் ஜாங் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டு இருந்தது.  இதனால் வடகொரியா, அணு ஆயுத சோதனைகளை கைவிடும் என்றும் அணு ஆயுத தளங்கள் மூடப்படும் என்றும் கூறப்பட்டு வந்தது.  இந்த நிலையில், வடகொரியா மீண்டும் 2வது முறையாக ஏவுகணை சோதனை நடத்தி அமெரிக்காவுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

Google+ Linkedin Youtube