டோனியின் ஆலோசனைகள் தவறாகவும் முடிந்துள்ளன: நகைச்சுவையாக கூறிய குல்தீப் யாதவ்

மும்பை,

இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக வலம் வந்தவர் டோனி. கேப்டன் பொறுப்பை துறந்த பிறகும், பந்து வீச்சாளர்களுக்கு தேவைப்படும் நேரத்தில் ஆலோசனை வழங்க டோனி தவறுவதில்லை. கேப்டன் கோலிக்கு பக்க பலமாக பொறுப்புடன் டோனி செயல்படுவதை கிரிக்கெட் ரசிகர்கள் பெரும்பாலும் போட்டியின் போது நேரலையில் கவனித்திருக்க முடியும். கேப்டன் விராட் கோலியும், டோனி தனக்கு பக்க பலமாக விளங்குகிறார் என்று பலமுறை பேட்டியின் போது தெரிவித்து இருக்கிறார். 

டோனியின் பல முடிவுகள் பெரும்பாலும் வெற்றியை பெற்றுத்தரும் என்பதால், கிரிக்கெட் ரசிகர்கள் அவரை மெச்சி சமூக வலைதளங்களில் பதிவிடுவதை காணலாம். இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற குல்தீப் யாதவிடம் டோனி வழங்கும் ஆலோசனை பற்றி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த குல்தீப் யாதவ் கூறியதாவது:- “பலமுறை டோனியின் முடிவுகள் தவறாகியுள்ளது. ஆனால், அவரிடம் அதை கூற முடியாது. அவர் ஏதாவது வீணாக பேசிக்கொண்டு இருக்க மாட்டார். மிக குறைவாகத்தான் பேசுவார். ஏதாவது சில குறிப்புகள் வழங்க வேண்டும் என அவர் எண்ணினால் மட்டுமே வந்து பேசுவார்’ என தெரிவித்துள்ளார்.  குல்தீப் யாதவ்வின் இந்த கருத்தை நகைச்சுவையாகவே குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது. 

Google+ Linkedin Youtube