ஐஸ்வர்யாராயை இழிவுபடுத்தி ‘மீம்ஸ்’ நடிகர் விவேக் ஓபராய் மன்னிப்பு கேட்டார்

விவேக் ஓபராய் ஆரம்பத்தில் ஐஸ்வர்யாராயை காதலித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் கருத்து கணிப்பு பற்றி ரசிகர் ஒருவர் ஐஸ்வர்யாராயை கேவலப்படுத்துவதுபோல் மீம்ஸ் ஒன்றை உருவாக்கி இருந்தார்.

அதில் சல்மான்கான் ஐஸ்வர்யாராய் உள்ள படத்தை கருத்துக்கணிப்பு என்றும், விவேக் ஓபராயுடன் இருக்கும் படத்தை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு என்றும் கணவர் அபிஷேக்பச்சன் மற்றும் மகளுடன் உள்ள புகைப்படத்தை தேர்தல் முடிவு என்றும் குறிப்பிட்டு பதிவிடப்பட்டு இருந்தது.

இந்த மீம்சை விவேக் ஓபராய் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. விவேக் ஓபராய் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நடிகர், நடிகைகள் பலர் கண்டித்தனர். இந்த பதிவு சிறுமி மற்றும் ஒரு பெண்ணை இழிவுபடுத்துவதாக உள்ளது என்று தேசிய மகளிர் ஆணையம் கண்டித்ததுடன் இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி விவேக் ஓபராய்க்கு நோட்டீசும் அனுப்பியது.

எதிர்ப்பு தீவிரமானதை தொடர்ந்து விவேக் ஓபராய் நேற்று மன்னிப்பு கேட்டார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், “ஒரு விஷயம் முதலில் வேடிக்கையாக தெரியும். ஆனால் மற்றவர்களுக்கு அப்படி தெரியாது. 10 வருடங்களாக சமூகத்தில் பின்தங்கிய 2,000 குழந்தைகளுக்கு உதவிகள் செய்துள்ளேன். எந்த பெண்ணையும் எப்போதுமே நான் இழிவாக நினைத்தது இல்லை. நான் பதிவிட்ட மீம்ஸ் காரணமாக ஒரு பெண் பாதிக்கப்பட்டு இருந்தால் அதற்காக மன்னிப்பு கோருகிறேன். அந்த பதிவை நீக்கிவிட்டேன்” என்று கூறியுள்ளார்.

Google+ Linkedin Youtube