இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு; இளைஞர் காயம்

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் நவ்ஷெரா பிரிவில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியது.  இதனை அடுத்து இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்தது.

இந்த சம்பவத்தில் போகர்னி என்ற கிராமத்தில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த முகமது ஈஷாக் (வயது 18) என்ற இளைஞருக்கு காயம் ஏற்பட்டது.  உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  சிகிச்சைக்கு பின் அவர் தேறி வருகிறார்.  எல்லை பகுதியில் தொடர்ந்து இரு தரப்பிலும் சில மணிநேரம் துப்பாக்கி சூடு நடந்தது.

Google+ Linkedin Youtube