குட்டையான உடைகள் அணியும் ஸ்ரீதேவி மகள் ஜான்வியை விமர்சித்த நடிகை

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ‘தடக்’ இந்தி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். மும்பையில் நடக்கும் பட விழா மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு ஜான்வி குட்டையான கவர்ச்சி உடைகள் அணிந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இதனால் சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் அவரை கேலி செய்கிறார்கள். சமீபத்தில் குட்டை ஷார்ட்சும், நீளமான டீ சர்ட்டும் அணிந்து வந்தார். அதை பார்த்த வலைத்தளவாசிகள் பேண்ட் அணிய மறந்து விட்டீர்களோ என்று நக்கல் செய்தனர். இப்போது பிரபல இந்தி நடிகை கத்ரினா கைப்பும் ஜான்வியின் ஆடையை விமர்சித்து இருக்கிறார்.

டி.வி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட கத்ரினாவிடம் ஜிம்முக்கு அணிந்து செல்லும் உடைகள் பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து அவர் கூறும்போது, “ஜான்வி கபூர் அணிந்து வரும் குட்டையான உடைகளை பார்க்கும்போது எனக்கு கவலையாக இருக்கிறது. நானும் ஜான்வியும் ஒரே ஜிம்மில்தான் உடற்பயிற்சி செய்கிறோம்” என்று கூறினார்.

இந்த கருத்து ஜான்வியின் உறவினரான சோனம் கபூருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அவர் தனது இன்ஸ்டாகிராமில் ஜான்வியின் புதிய புகைப்படத்தை வெளியிட்டு ஜான்வி சாதாரண உடையும் அணிவார். அதில் அழகாகவும் இருப்பார் என்று பதிலடி கொடுத்துள்ளார். இந்த மோதலை இந்தி பட உலகில் பரபரப்பாக பேசுகின்றனர்.

Google+ Linkedin Youtube