ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் திகில் படம் : எழில் டைரக்‌ஷனில் ‘ஆயிரம் ஜென்மங்கள்’

தற்போது இவர் தனது தயாரிப்பு நிறுவனம் அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக பிரம்மாண்டமான படங்களை தயாரித்து வருகிறார்.

முதல் படமாக, ‘சொல்லாமலே’ தொடங்கி, ‘பிச்சைக்காரன்’ வரை பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் சசி இயக்கத்தில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்க, ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தை தயாரித்து வருகிறார். இதைத்தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்க, ஒரு திகில் படத்தையும் தயாரித்து வருகிறார். படத்துக்கு, ‘ஆயிரம் ஜென்மங்கள்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘பூவெல்லாம் உன் வாசம்’ போன்ற வெற்றிப்படங்களை தந்த டைரக்டர் எழில், இந்த படத்தை டைரக்டு செய்கிறார்.

‘கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, சென்னையில் வேலை தேடிக்கொண்டிருக்கும் ஒரு இளைஞனுக்கு, ஒரு வித்தியாசமான வேலை வாய்ப்பு கிடைக்கிறது. அவருடைய கஷ்டமான சூழலில், மிகப்பெரிய வருமானத்துடன் கூடிய வெளிநாட்டு வேலை வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள முடிவு செய்கிறான். அவன் ஏற்றுக்கொண்டபடி, வெளிநாடும் சென்றடைகிறான். அங்கு அவனுக்கு நிகழ்ந்தது என்ன? என்பதே இந்த படத்தின் கதை. இந்த திகில் படத்தில் ஜனரஞ்சகமாக நகைச்சுவை கலந்து, சுவராஸ்யமாக திரைக்கதை அமைத்து இருக்கிறோம்’ என்கிறார் டைரக்டர் எழில்.

யூ கே செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்ய, சத்யா இசையமைக்க, யுகபாரதி, விவேக், ராகேஷ், கருங்குயில் கணேஷ் ஆகியோர் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். கதை-வசனத்தை ஈ.முருகன் எழுதியிருக்கிறார்.

ஜி.வி.பிரகாசுடன் ஈஷா ரெப்பா, சதீஷ், ஆனந்தராஜ், சாக்ஸ், ‘ஆடுகளம்’ நரேன், வையாபுரி, மனோபாலா, சித்ரா லட்சுமணன், நிகிஷா படேல், சாக்‌ஷி அகர்வால், கோவை சரளா ஆகியோர் நடிக்கிறார்கள்.

Google+ Linkedin Youtube