வைரலாகும் புகைப்படம் : படப்பிடிப்பில் பேரனுடன் ரஜினிகாந்த்

மும்பையை ஆட்டி படைக்கும் ரவுடிகளை தீர்த்து கட்டும் என்கவுண்ட்டர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிப்பதாக தகவல். மற்றுமொரு வயதான தோற்றத்திலும் நடிப்பதாக கூறப்படுகிறது. 

அனிருத் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நயன்தாராவும் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த காட்சிகளை திருட்டுத்தனமாக படம்பிடித்து சமூக வலைத்தளத்தில் யாரோ அடிக்கடி வெளியிட்டு வருகின்றனர். 

இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் படப்பிடிப்பு நடக்கும் பகுதியை சுற்றி பாதுகாப்பு போட்டுள்ளனர். படப்பிடிப்பு தளத்துக்குள் செல்போன் கொண்டு செல்லவும் தடை விதித்துள்ளனர். இந்த நிலையில் ரஜினிகாந்த் தனது இளைய மகள் சவுந்தர்யாவின் மகனும் பேரனுமான வேத் கிருஷ்ணாவுடன் படமாக்கப்பட்ட தர்பார் படக்காட்சிகளை கம்ப்யூட்டரில் கண்டு ரசித்துள்ளார். 

அதனை ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தனது செல்போனில் படம் பிடித்து டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் ரஜினிகாந்த் லேசான தாடியுடன் இளைமை தோற்றத்தில் இருக்கிறார். இந்த புகைப்படத்தை ரஜினிகாந்த் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

Google+ Linkedin Youtube