60-வது படத்தில் கார் பந்தய வீரர் வேடத்தில், அஜித்

அமிதாப்பச்சன் நடித்த வேடத்தில், அஜித்குமார் நடித்து இருக்கிறார். இது, அவருக்கு 59-வது படம். அவருக்கு ஜோடியாக வித்யாபாலன் நடித்துள்ளார். வினோத் டைரக்டு செய்து இருக்கிறார். இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்துள்ளார்.

போனிகபூரின் தயாரிப்பு நிறுவனத்துக்கு இது முதல் தமிழ் படம். இந்த படம் வருகிற ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் அஜித் தனது 60-வது படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்தையும் வினோத் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இது, முழுக்க முழுக்க அதிரடி சண்டை படமாக இருக்கும், படப்பிடிப்பு முழுவதும் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுதொடர்பாக தயாரிப்பாளர் போனிகபூர் கூறுகையில், “இந்த படத்தில் அஜித், அஜித்தாகவே இருப்பார். படத்தில் கார் பந்தய காட்சி, விளையாட்டு என்று அவருக்கு பிடித்தமான அனைத்தும் இருக்கும்’ என்றார். இதை வைத்து பார்க்கும்போது, இந்த படத்தில் அஜித் கார் பந்தய வீரராக வலம் வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக பேசப்படுகிறது. படம் 2020-ம் ஆண்டு பொங்கல் விருந்தாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Google+ Linkedin Youtube