‘தர்பார்’ படப்பிடிப்பு 2 வாரத்தில் முடிகிறதா? ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம்

பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபார், தலிப் தாஹில், யோகிபாபு, மனோபாலா, ஹரிஷ் உத்தமன், ஆனந்தராஜ், சுமன், ஸ்ரீமன் உள்பட மேலும் பலர் நடிக்கிறார்கள்.

இதன் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் மும்பையில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ரஜினிகாந்த் மும்பை தாதாக்களை அழிக்கும் போலீஸ் அதிகாரியாக வருகிறார். ரஜினியின் வயதான இன்னொரு தோற்றமும் படத்தில் உள்ளது என்றும், அவருக்கு மகளாக நிவேதா தாமஸ் நடிப்பதாகவும் கூறப்படு கிறது. போலீஸ் அதிகாரியாக வரும் ரஜினியின் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். படப்பிடிப்பு காட்சிகள் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது. இதனை தடுக்க படப்பிடிப்பு தளத்துக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதித்துள்ளனர். இந்த நிலையில் தர்பார் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் இன்னும் 2 வாரத்தில் வசன காட்சிகளின் படப்பிடிப்பு முடிய இருப்பதாகவும் தகவல் வெளியானது. ரசிகர்களும் நம்பினர். இதனை ஏ.ஆர்.முருகதாஸ் டுவிட்டரில் மறுத்துள்ளார்.

ஆகஸ்டு மாதம் வரை தர்பார் படப்பிடிப்பு நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் இந்த படத்தின் ஒரு பாடல் காட்சிக்காக ரஜினிகாந்தும், நயன்தாராவும் சுவிட்சர்லாந்து செல்ல இருக்கிறார்கள். தர்பார் படம் ஜனவரி மாதம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.

Google+ Linkedin Youtube