இலங்கையில் ஈஸ்டர் அன்று பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட அமைப்பு அழிக்கப்பட்டது -அதிபர் மைத்ரிபால சிறிசேனா

கொழும்பு

இலங்கையில் பொலனறுவை எனும் இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அதிபர் மைத்ரிபால சிறிசேனா கூறியதாவது:-

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21-ம் தேதி, ஈஸ்டர் தினத்தில் பயங்கரவாத  தாக்குதல் நடத்திய அமைப்பு தற்போது அழிக்கப்பட்டு விட்டது. இலங்கையில் அமைதி நிலவுவதற்கான முயற்சிகள் வலிமையாக  மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை.

இலங்கையில் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்த கடந்த நான்கரை வருட காலங்களாக எனது அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இலங்கைக்கான அபிவிருத்தி திட்டங்களை துரிதமாக முன்னெடுப்பதே தற்போது அனைவரது கடமையாக உள்ளது என்றும்  தெரிவித்தார்.

Google+ Linkedin Youtube