ஆட்டத்தின் முதல் 45 நிமிடங்கள், இந்திய அணிக்கு சாதகமாக அமையவில்லை-விராட் கோலி

மான்செஸ்டர்,

மான்செஸ்டரில் நேற்று நடந்த உலககோப்பை கிரிக்கெட் அரையிறுத்திப் போட்டி மழை காரணமாக இன்று மீண்டும் நடைபெற்றது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது. 

இந்நிலையில் உலககோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டிக்குள் நுழைய 240 ரன்கள் எடுக்க வேண்டும் எனும் இலக்கோடு களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

நியூசிலாந்து அணி தரப்பில் மேட் ஹென்றி 3, போல்ட் 2, சாண்ட்னர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அபாரமாக ஆடிய டோனி 2-வது ரன்னுக்கு ஆசைப்பட்டு ஓடியபோது ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

இந்திய அணியில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 77, டோனி 50, பாண்டியா 32, ரிஷப் பன்ட் 32 ரன்கள் சேர்த்தனர். இந்திய தரப்பில் புவனேஷ்வர் குமார் 3, பும்ரா, பாண்டியா, ஜடேஜா, சாஹல் தலா 1 விக்கெட் எடுத்தனர். நியூசிலாந்து அணியில் அதிகபட்டசமாக ராஸ்டெய்லர் 74, வில்லியம்சன் 67, நிகோல்ஸ் 28 ரன்கள் எடுத்தனர். இந்தியாவை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிபோட்டிக்குள்  நியுசிலாந்து அணி நுழைந்தது.

இந்நிலையில் தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை, தவறான ஷாட்களை ஆடி ஆட்டமிழந்தோம்.  ஆட்டத்தை சிறப்பான முறையில் முடிப்பார் என்ற நோக்கத்தில் தான் டோனியை 7-வது இடத்தில் களம் இறக்கினோம்.

ஆட்டத்தின் முதல் 45 நிமிடங்கள், இந்திய அணிக்கு சாதகமாக  அமையவில்லை.  தன்னுடைய ஓய்வு குறித்து எங்களிடம் டோனி எதுவும் கூறவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Google+ Linkedin Youtube