உலக கோப்பை இறுதிப்போட்டி : நியூசிலாந்து 241 ரன்கள் சேர்ப்பு

லண்டன், 

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக மார்ட்டின் கப்தில் மற்றும் ஹென்றி நிகோல்ஸ் களமிறங்கினர். இதில் மார்ட்டின் கப்தில் 19 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேன் வில்லியம்சன், ஹென்றி நிகோல்ஸ் உடன் கைக்கோர்த்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் கேன் வில்லியம்சன் 30 ரன்களில் கேட்ச் ஆக, அவரை தொடர்ந்து அரைசதம் அடித்த ஹென்றி நிகோல்ஸ் 55 ரன்களில் போல்ட் ஆனார்.

பின்னர் களமிறங்கிய ராஸ் டெய்லர் 15 ரன்னிலும், ஜேம்ஸ் நீ‌ஷம் 19 ரன்னிலும், கிரான்ட்ஹோம் 16 ரன்னிலும், டாம் லாதம் 47 ரன்களிலும், மேட் ஹென்றி 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்களை எடுத்துள்ளது. கடைசியில் மிட்செல் சான்ட்னெர்  5 ரன்னுடனும், டிரென்ட் பவுல்ட்  1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இங்கிலாந்து அணியில் பிளங்கெட் மற்றும் கிறிஸ் வோக்ஸ் தலா 3 விக்கெட்டுகளும், மார்க் வுட் மற்றும் ஜோப்ரா ஆர்ச்சர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து, 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்க உள்ளது.

Google+ Linkedin Youtube