உள்ளாட்சி தேர்தல் நடத்த கால அவகாசம் கோரிய தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி,

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர்  வழக்கு தொடர்ந்து இருந்தார்.  இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த மாநில தேர்தல் ஆணையம்,  தமிழகத்தில் அக்டோபர் 31- வரை உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாது  எனவே, உள்ளாட்சி தேர்தல் நடத்த கால அவகாசம் வேண்டுமென தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில்,  உள்ளாட்சி தேர்தல் நடத்த அக்.31 வரை கால அவகாசம் கோரிய தமிழக அரசின் கோரிக்கையை  உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபர் இறுதியில் உறுதியாக வெளியிடப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது. 

Google+ Linkedin Youtube