ஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா? ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்

#Oviya#Bigg Boss#Shakthi

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைவரையும் கவர்ந்தவர் ஓவியா. இவர் ஷக்தியுடன் சண்டை போட்டது பரபரப்பாக இருந்தது. அதன் பின்னர் மன்னிப்பு கேட்காமல் இருந்த ஷக்தி 100வது நாளில் ஓவியாவிடம் அனைவர் முன்னிலையிலும் மன்னிப்பு கேட்டார்.

தற்போது ஒரு பேட்டியில் இது பற்றி ஷக்தி பேசினார். ஓவியாவிடம் சண்டை போட்டதற்காக மன்னிப்பு கேட்டது அவரது ரசிகர்கள் பலத்திற்காக அல்ல. மனது உறுத்தியதால் தான் என்றார்.

அப்போதே அவரிடம் மன்னிப்பு கேட்காததற்கு காரணம் அவர் குணாதிசியம் மாறிக்கொண்டே இருந்தது. அவருக்கு பைபோலார் இருப்பதாக ஓவியாவே ஷக்தியிடம் கூறினாராம்.

அதனால் தான் ஓவியா திடிரென கோபமாவதும், சில நிமிடங்களிலேயே கூலாக மாறி பேசுவதுமாக இருந்தார் என்று கூறினார்.

Google+ Linkedin Youtube