உரிய ஆலோசனைகள், ஆய்வுகளுக்குப் பிறகே சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியுள்ளோம்: நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி, 

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370- சட்டப்பிரிவு நீக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலங்களவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:- 

 காஷ்மீரில் பெண்களுக்கு இதுநாள் வரை அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வந்தது.  சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியதன் மூலம் பழங்குடியின மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் சலுகைகளை பெறமுடியும்.  காஷ்மீர் குறித்து எடுக்கப்பட்ட முடிவுக்கு நாட்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஜனசங்கம் எடுத்த முடிவு தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கும் முடிவை ஒரே நாளில் எடுக்கவில்லை.  உரிய ஆலோசனைகள், ஆய்வுகளுக்குப் பிறகே சட்டப்பிரிவு 370ஐ நீக்கியுள்ளோம்.  370 சட்டப்பிரிவு குறித்து ஏற்கனவே தேர்தலின் போது பேசியிருந்தோம்,காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் இதுபோல் சட்டங்கள் மாற்றப்பட்டிருக்கிறது” என்றார்.


Google+ Linkedin Youtube