லடாக்கை யூனியன் பிரதேசமாக மாற்ற சீனா எதிர்ப்பு: இந்தியா நிராகரிப்பு

புதுடெல்லி, 

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக அறிவித்த மத்திய அரசு, ஜம்மு காஷ்மீர் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என அறிவித்தது. ஜம்மு காஷ்மீர் சட்ட சபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும் லடாக் பகுதி சட்ட சபை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. 

லடாக்கை யூனியன் பிரதேசமாக பிரிக்க அண்டை நாடான சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சீனாவின் இறையாண்மையை பாதிக்கும் வகையில் இந்தியாவின் நடவடிக்கை இருப்பதாகவும்  சீனா தெரிவித்து இருந்தது.  ஆனால், சீனாவின் எதிர்ப்பை இந்தியா நிராகரித்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறுகையில்,  ”இந்த விவகாரம் முழுக்க முழுக்க இந்தியாவின் உள்விவகாரம்” என தெரிவித்துள்ளது.

Google+ Linkedin Youtube