இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்திற்கு பாதுகாப்பை அதிகரிக்க கோரிக்கை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய பிரிவு 370ஐ பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு ரத்து செய்துள்ளது.

இதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவிக்கிறது. காஷ்மீர் மக்களுக்கு நாங்கள் ஆதரவு அளிப்போம், சர்வதேச அரங்கத்திற்கு செல்வோம் என்றெல்லாம் கூறி வருகிறது. பாகிஸ்தானுக்கான இந்திய தூதரை அழைத்து அந்நாட்டு வெளியுறவுத்துறை சம்மன் விடுத்தது. எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்திற்கு பாதுகாப்பை அதிகரிக்க அந்நாட்டு அதிகாரிகளிடம், இந்திய அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். 

Google+ Linkedin Youtube