மேட்டூர் அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்வு

சேலம், 

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடக மற்றும் கேரள மாநிலங்களில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது.  இதன்காரணமாக கர்நாடகாவில் உள்ள முக்கிய நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. 

இந்த நிலையில், மேட்டூர் அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் 10 அடி  உயர்ந்துள்ளது.  அணையின் நீர் மட்டம் காலை 8 மணி நிலவரப்படி 67.40 அடியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து  விநாடிக்கு 93 ஆயிரம் கன அடியாக உள்ளது.

Google+ Linkedin Youtube