டி.என்.பி.எல். கிரிக்கெட் 2-வது தகுதி சுற்று போட்டி: திண்டுக்கல் டிராகன்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

நத்தம், 

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில், மதுரை பாந்தர்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகளுக்கு இடையேயான 2-வது தகுதி சுற்று ஆட்டம் தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது.

திண்டுக்கல் டிராகன்ஸ் அணி கடந்த ஆண்டு இறுதிப்போட்டி வரை முன்னேறியது. இந்த சீசனிலும் அந்த அணி சிறப்பாகவே செயல்பட்டது. லீக் சுற்றில் 6 ஆட்டத்தில் வெற்றி பெற்ற திண்டுக்கல் அணி, கோவை கிங்சுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதல் தோல்வியை சந்தித்தாலும் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. நேற்று முன்தினம் நடந்த முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் 5 ரன் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியிடம் தோல்வி கண்டது.

மதுரை பாந்தர்ஸ் அணி லீக் ஆட்டத்தில் 5 வெற்றி, 2 தோல்வியுடன் (திண்டுக்கல், காஞ்சி வீரன்ஸ் அணிகளிடம்) புள்ளி பட்டியலில் 3-வது இடம் பெற்றது. முதல் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் மதுரை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் காஞ்சி வீரன்ஸ் அணிக்கு பதிலடி கொடுத்து 2-வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது.

இதனையடுத்து, இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி சென்னையில் 15-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறும் இறுதிப்போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை சந்திக்கும். இறுதிப்போட்டி வாய்ப்புக்காக இரு அணிகளும் மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

Google+ Linkedin Youtube