பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி: இந்திய ராணுவத்தால் முறியடிப்பு

ஜம்மு,

இந்திய ராணுவம் தரப்பில் இருந்து கூறியதாவது:-

காஷ்மீரில் நேற்றிரவு பல இடங்களில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது. இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகளை அனுப்ப பாகிஸ்தான் ராணுவம் அதிக முயற்சிகளை எடுத்து வருகிறது.

ஆக்கிரமிப்பு காஷ்மீரின் நீலம் பகுதியில் தகவல் தொடர்பு மையத்தை பாகிஸ்தான் தொடங்கியுள்ளது. தகவல் தொடர்பு மையம் மூலம் பல்வேறு பகுதிகளில் இருந்து தீவிரவாதிகளின் அனுப்ப பாக். முயற்சிக்கிறது.

பாகிஸ்தான் ராணுவம், பயங்கரவாதிகளின் தாக்குதலை முறியடிக்க இந்திய ராணுவம்  தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளது.

Google+ Linkedin Youtube