சச்சின் தெண்டுல்கர் சாதனையை சமன் செய்த நியூசிலாந்து வீரர்

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்நிலையில் காலே வில் நடைபெற்று வரும் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டியின், 2-வது நாளில் அடித்த சிக்ஸர் மூலம் டிம் சவுதீ, சச்சின் தெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அடித்துள்ள சிக்ஸர் சாதனையை சமன் செய்துள்ளார்.

சச்சின் தெண்டுல்கர், 200 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 329 இன்னிங்ஸ் மூலம் 69 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இதனையடுத்து டிம் சவுதீ 66 டெஸ்ட்களில் 89 இன்னிங்ஸ்களில் 69 சிக்ஸர்கள் அடித்து, சச்சின் டெஸ்ட் கிரிக்கெட்டில் அடித்துள்ள சிக்ஸர் சாதனையை சமன் செய்துள்ளார். மேலும் டிம் சவுதீ டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் 17-வது இடத்தில் இருக்கிறார்.

டெஸ்ட் அரங்கில், அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிரெண்டன் மெக்கலம். அவர் இதுவரை 107 சிக்ஸர்கள் அடித்துள்ளார். மேலும் இந்திய அணியை பொறுத்தவரை முன்னாள் நட்சத்திர வீரர் வீரேந்திர சேவாக், அதிகபட்சமாக 91 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.  

Google+ Linkedin Youtube