ஹெல்மெட் அணியாதவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் கடந்த ஆண்டை விட 91% அதிகம்

சென்னை,

தமிழகத்தில் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்தக் கோரி ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மாவட்ட வாரியாக பதிவான விபத்து விபரம் குறித்தும், ஹெல்மெட் அணியாததால் பதியப்பட்ட வழக்குகள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய கடந்தமுறை உத்தரவிட்டிருந்தது.

அதன் அடிப்படையில் சட்டம் ஒழுங்கு பிரிவின் உதவி ஐ.ஜி சாம்சன் தரப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஹெல்மெட் அணியாதவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 91 சதவீதம் அதிகரித்துள்ளது.

2018 ஆகஸ்ட் வரை ஹெல்மெட் அணியாத காரணத்திற்காக 22.65 லட்சம் நபர்கள் மீது வழக்குகள் பதியப்பட்ட நிலையில், இந்தாண்டு 43.31 லட்சம் பேர்கள் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளது. 2018 ஆகஸ்ட் வரை ஹெல்மெட் அணிந்தும் விபத்தில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 224, ஹெல்மெட் அணியாமல் உயிரிழந்ததவர்கள் எண்ணிக்கை 4,337 ஆக உள்ளது என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google+ Linkedin Youtube