அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி

வாஷிங்டன்,

அமெரிக்காவில் பெருகி வரும் துப்பாக்கி கலாச்சாரத்தால் நாளுக்கு நாள் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்தும் விதத்தில் சட்டம் கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மேலும் ஒரு துப்பாக்குச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.  அமெரிக்காவின் மிசோரி மாகாணம் கான்சாஸ் நகரத்தில் உள்ள பார் ஒன்றில் இன்று காலை 6.30 மணிக்கு மர்ம நபர்  உள்ளே நுழைந்தார்.

பாருக்குள் நுழைந்த அவர் தான் மறைத்து  வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். 

இதன் பின்னர் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஒடினான். சம்பவத்தை நேரில் கண்டவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் போலீசார் குற்றவாளியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Google+ Linkedin Youtube