எச் 1பி விசா வழங்குவதில் எந்த வித கட்டுப்பாடும் இல்லை- அமெரிக்கா

டெல்லி: கடந்த 9 மாதங்களில் வழங்கப்பட்ட எச்-1பி விசாக்களில் 70 சதவிகிதம் வரையில் இந்தியர்களுக்கே வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க விசா அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்ற பின்பு, ஹெச்-1பி விசா நடைமுறையில் பெரும் மாற்றமும் கட்டுப்பாடும் கொண்டுவரப்போவதாக அறிவித்தார். அவர் கூறியது போலவே, கடந்த ஏப்ரல் மாதம் ஹெச்-1பி விசா விதிமுறையை கடுமையாக்கும் உத்தரவில் கையெழுத்திட்டார். கூடவே, அமெரிக்காவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் திறமையான அமெர்க்கர்களையே பணியில் அமர்த்த வேண்டும் என்றும் நிபந்தனைகளையும் விதித்தார்.

Google+ Linkedin Youtube