சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்னை வருகை எதிரொலி: நாளை ரெயில்கள் சிறிது நேரம் நிறுத்தம்

சென்னை,

சீன அதிபர் ஜி ஜின்பிங் 2 நாள் அரசு முறை பயணமாக நாளை (வெள்ளிக்கிழமை) சென்னை வருகிறார். நாளை பிற்பகல் 1.30 மணி அளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடையும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.  

இதன் பின்னர் கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலுக்கு சென்று தங்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங் மாலை 4 மணி அளவில் மாமல்லபுரத்துக்கு காரில் புறப்பட்டு செல்கிறார்.

வழிநெடுக 34 இடங்களில் சுமார் 50 ஆயிரம் பேர் திரண்டு சீன அதிபருக்கு பிரமாண்டமான அளவில் உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள். 

இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங்  நாளை சென்னை வரும்போது சிறிது நேரம்  ரெயில்கள் நிறுத்தப்படும் என்று தெற்கு ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.  

இது தொடர்பாக தெற்கு ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

சீன அதிபர் ஜி ஜின்பிங் நாளை சென்னை வரும்போது கிண்டி வழித்தடத்தில் சிறிதுநேரம் ரெயில்கள் நிறுத்தப்படும்.  புறநகர் மற்றும் விரைவு ரெயில்கள் பல்லாவரம் பகுதியில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு பிறகு அனுப்பப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Google+ Linkedin Youtube