நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தின் டிரெய்லர் டுவிட்டரில் வெளியீடு

சென்னை,

நடிகர் விஜய் நடித்து, அட்லி இயக்கிய ‘பிகில்’ படம் தீபாவளிக்கு வருவது உறுதி என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் விஜய் ஜோடியாக நயன்தாரா நடித்து இருக்கிறார்.  ‘வில்லு’ படத்துக்கு பின், இருவரும் ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம், இது.

இந்த படத்தில், விவேக், கதிர், ஜாக்கி ஷராப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், யோகி பாபு, மனோபாலா, தேவதர்ஷினி, இந்துஜா, அமிர்தா ஐயர், ரெப்பா மோனிகா ஜான், வர்ஷா பொல்லம்மா ஆகியோரும் இடம் பெறுகிறார்கள்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகிய மூவரும் தயாரித்துள்ளனர்.

படத்தில், கால்பந்து பயிற்சியாளராக விஜய் நடித்து இருக்கி றார். பிசியோதெரபிஸ்ட் ஆக நயன்தாரா நடித்துள்ளார். படம், மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகி இருக்கிறது. அதற்கு இணையாக வியாபாரமும் ஆகியிருக்கிறது. படம், விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6 மணியளவில் டுவிட்டரில் வெளியானது.  2.41 நிமிடங்கள் வரை ஓடக்கூடிய இதன் முதல் காட்சியில், கால்பந்து போட்டியை விளையாடுவதற்காக டாஸ் போடப்படுகிறது.  தொடர்ந்து வரும் சில காட்சிகளில் நடிகர் விஜய் தோன்றுகிறார்.

நடிகர் விஜய் கால்பந்து போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தும் வகையில் விளையாடுவது போலவும், அதிரடி சண்டை காட்சிகளில் ஈடுபடுவது போன்றும், நடிகை நயன்தாராவுடன் சில காட்சிகளும், நடனம் ஆடும் காட்சிகளும் மற்றும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையிலான வசனம் பேசும் காட்சிகளும் வெளியிடப்பட்டு உள்ளன.

டிரெய்லரில், அனைத்து மகளிருக்காகவும் படம் அர்ப்பணிக்கப்படுகிறது என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.  ஹேப்பி தீபாவளி நண்பா என்ற வாசகத்துடன் டிரெய்லர் முடிவடைகிறது.

Google+ Linkedin Youtube