கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகைகள் பட்டியல் தயாராகிறது

சென்னை, 

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் 30 கோடி கொள்ளையடித்த  திருவாரூர் முருகன் பல்வேறு மாநிலங்களிலும் கொள்ளை அடித்திருப்பது தெரிய வந்துள்ளது.

தான் கொள்ளையடித்த நகைகளில் பெரும்பாலானவற்றை தனது உல்லாச வாழ்க்கைக்கு செலவழித்துள்ளான். நடிகைகளுக்கு நகைகளை அள்ளி  இறைத்துள்ளான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நடிகையின் பெயரை முருகன் கூறியிருக்கிறான். ஆனால் தமிழில் பிரபலமாகி வரும் இளம் வயது 
நடிகைக்கு நகைகளை பரிசாக வாரி கொடுத்ததாக முருகன் கூறியுள்ளான்.

அந்த நகைகளை நடிகை மறுக்காமல் வாங்கி கொண்டதாகவும்  கூறப்படுகிறது. கொள்ளையன் முருகன் தெரிவித்துள்ள நடிகை யார் என்பது மிகப் பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. அவரை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் அந்த நடிகையுடன் முருகன் புகைப்படம் எதுவும் எடுத்துக்கொண்டானா? என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது.

நகைக்கடை அதிபர்கள் என்று கூறியே நடிகைகளை தங்கள் வலையில் முருகனும், சுரேசும் விழ வைத்துள்ளனர். கொள்ளையன் என்பதை தெரிந்து கொள்ளாமல் தெலுங்கில் சில நடிகைகளும் முருகன் கொடுத்த நகைகளை வாங்கியுள்ளனர். தற்போது முருகனிடம் பழகிய நடிகைகளின் பட்டியலை போலீசார் ரகசியமாக தயாரித்து வருகிறார்கள். படத்தில் நடிக்காமலேயே அவர்களிடம் ஏன் நகைகளை வாங்கினீர்கள்? என்பது உள்ளிட்ட கேள்விக்  கணைகளை தொடுக்கவும் போலீசார் தயாராகி வருகிறார்கள்.

அதேபோல் தற்போது போலீஸ் காவலில் இருக்கும் முருகனின் அக்காள் மகன் சுரேசை எப்படியாவது பெரிய ஆளாக்கிவிட வேண்டும் என்பதில் முருகன்
உறுதியாக இருந்துள்ளான். கட்டிட காண்டிராக்டர், சினிமா நடிகர், தொழிலதிபர் என்ற அடையாளத்தை பெற்றுத் தர வேண்டும் என்று முயன்றுள்ளான்.

Google+ Linkedin Youtube