காதலன் விக்னேஷ் சிவனுடன் நடிகை நயன்தாரா திருப்பதி கோவிலில் சாமி தரிசனம்

திருப்பதி,

திருப்பதி கோவிலில் நடிகை நயன்தாரா தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்தார். இருவருக்கும் இந்த ஆண்டின் இறுதியில் திருமண நிச்சயதார்த்தம்  நடைபெறவிருப்பதாகக் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும்,  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று வழிபாடு நடத்தினர். அவர்களுக்கு ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள்  பிரசாதங்களை வழங்கினர்.

வேத பண்டிதர்களின் ஆசிர்வாதத்திற்குப் பின் கோவிலுக்கு வெளியே வந்த  நயன்தாராவை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க, அவர்களுடன் நயன்தாரா செல்பி எடுத்துக் கொண்டார். இதை அடுத்து காரில் புறப்பட்டுச் சென்றார். 

Google+ Linkedin Youtube