டெல்லியில் பரமஹம்ச யோகானந்தாவின் நினைவாக ரூ.125 மதிப்பிலான நாணயம் வெளியீடு

v

புதுடெல்லி,

நாட்டில் லட்சக்கணக்கான மக்களுக்கு தியானம் மற்றும் கிரியா யோகாவை அறிமுகப்படுத்திய குருவாக அறியப்படுபவர் பரமஹம்ச யோகானந்தா.  கடந்த 1893ம் ஆண்டு பிறந்த அவரது 125வது பிறந்த தினம் 2018ம் ஆண்டு கொண்டாடப்பட்டது.

அவரது நினைவாக ரூ.125 மதிப்புள்ள நாணயம் ஒன்றை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் டெல்லியில் இன்று வெளியிட்டு உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில், மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான இணை மந்திரி அனுராக் தாகூர் கலந்து கொண்டார்.

Google+ Linkedin Youtube