சிலி நாட்டில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6 `ஆக பதிவு

சாண்டியாகோ,

தென் அமெரிக்க நாடான சிலியில் நேற்று மாலை 6.53 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6 ஆக  பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கமானது சிலி நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள இல்லபெல் நகரத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

சிலி நாட்டில் கல்வி, போக்குவரத்து மற்றும் பொது சேவைகளுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டதை கண்டித்து அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து நேற்று தலைநகர் சாண்டியாகோவில் போராட்டத்திற்காக நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டிருந்த போது நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தின் காரணமாக உயிரிழப்புகள் மற்றும் கட்டிட சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Google+ Linkedin Youtube