50 ஓவர் கிரிக்கெட் போட்டியை இரு இன்னிங்ஸ்களாக பிரிக்க வேண்டும் -தெண்டுல்கர் யோசனை

மும்பை,

20 ஓவர் போட்டிகள் வந்த பிறகு  50 ஓவர் போட்டிகளின்  மவுசு குறைய  ஆரம்பித்தது. இதில் சுவாரசியத்தைக் கூட்டச் செய்த மாற்றங்களில் ஒன்றுதான் பவர்-ப்ளே.

இந்த நிலையில் 50 ஓவர் கிரிக்கெட் போட்டியின் மவுசை கூட்ட  சச்சின் தெண்டுல்கர் சில யோசனைகளை தெரிவித்து உள்ளார். அவர் கூறி இருப்பதாவது;-

50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டியை தலா 25 ஓவர்களைக் கொண்ட இரு இன்னிங்சுகளாகப் பிரிக்க வேண்டும். டாஸ் வென்ற அணி, 25 ஓவர்கள் கொண்ட முதல் இன்னிங்சை ஆடத் தொடங்க வேண்டும். அதன் பின்னர் எதிரணி விளையாட வேண்டும். இதேபோல் இரண்டாவது இன்னிங்சை விளையாட வேண்டும். முதல் ஐந்து ஓவர்களுக்கு கட்டாயமாக பவர் பிளே அளிக்க வேண்டும்.

இதன் மூலம் 50 ஓவர் கிரிக்கெட் போட்டியைக் காண ரசிகர்களிடையே உற்சாகம் அதிகரிக்கும், விளம்பரதாரர்களும் மகிழ்ச்சி அடைவர் என  சச்சின் தெண்டுல்கர் கூறி உள்ளார்.

Google+ Linkedin Youtube