கமல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் ரஜினிகாந்த்

சென்னை,

நடிகர் கமலின் 65 வது பிறந்த நாள் விழா மற்றும் 60 ஆம் ஆண்டு கலைப்பயண கொண்டாட்டம், வரும்  7ஆம் தேதி பரமக்குடியிலும், 8 ஆம் தேதி சென்னையிலும் நடக்கிறது.

அதனை தொடர்ந்து, வரும் 17 ஆம் தேதி சென்னை எஸ்.டி.ஏ.டி உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள நட்சத்திர கலைவிழாவில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 

இதில் கமலின் 44 ஆண்டுகால நண்பரும், நடிகருமான ரஜினி கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ரஜினி மற்றும் கமல் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Google+ Linkedin Youtube