அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதி: வீடுகளில் விளக்கேற்றி மக்கள் வழிபாடு

லக்னோ,

நீண்ட ஆண்டுகளாக நடந்து வந்த அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் அங்கு ராமர் கோவில் கட்ட சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து நேற்று தீர்ப்பு வழங்கியது. இதனை அயோத்தியில் உள்ள பக்தர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். 

அயோத்தியில் வீடுகளில் விளக்கேற்றி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இதேபோல் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள். ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷமும் எழுப்பப்பட்டன. இதனால் அயோத்தி உள்பட நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து ராம பக்தர்கள் கூறும்போது, ‘எங்களது அரசர் (ராமர்) அவரது பிறந்த இடத்துக்கு திரும்பி வந்துவிட்டார்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு நாங்கள் பல காலமாக காத்திருந்தோம். அது இன்று நிறைவேறி இருக்கிறது. எங்களது கொண்டாட்டங்களை எளிமையாக செய்து வருகிறோம். இது எங்களுக்கு 2-வது தீபாவளி ஆகும். இதனால் வீடுகளில் விளக்கேற்றி வழிபட்டோம்’ என்றனர்.

அயோத்யாவில் உள்ள சரயு ந‌தியில் மாலை நேர ஆரத்தி உற்சவம் நடைபெற்றது. அயோத்தி தீர்ப்பு வெளியான நிலையில், பக்தர்கள் நதிக்கரையில் வரிசையாக அமைக்கப்பட்டிருந்த பந்தலில் அமர்ந்திருந்து சரயு நதிக்கு, தீப ஆரத்தி காட்டி வழிபட்டனர். 

Google+ Linkedin Youtube