முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

சென்னை,

பரபரப்பான அரசியல் சூழல்களுக்கு இடையில் சென்னை தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று தொடங்கியது. அமைச்சரவை கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தல் குறித்தும், புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. 

மேலும் உள்ளாட்சி தேர்தலில் மேயர், நகராட்சி தலைவர் தேர்வு செய்யும் முறை குறித்தும் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளது. அதை தொடர்ந்து, அரசு சார்பில் பல்வேறு கொள்கை முடிவுகளும் எடுக்கப்பட உள்ளன.

Google+ Linkedin Youtube