நகர்புறங்களில் ஜனவரி-மார்ச் காலாண்டில் வேலை வாய்ப்பின்மை 9.3 சதவீதமாக குறைந்தது

புதுடெல்லி,

நாட்டில் வேலை வாய்ப்பு வாய்ப்பின்மை  பிரச்சினை சில ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. சமீபத்தில் பொருளாதார வீழ்ச்சி காரணமாக பல்வேறு துறைகள் சரிவை சந்தித்து வருகின்றன.

நாட்டில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட வில்லை என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில் நகர்புறங்களில் 3 மாதத்தில் வேலை வாய்ப்பின்மை 9.3 சதவீதமாக குறைந்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மத்திய புள்ளியியல் அமைச்சகம் சார்பாக வேலை உருவாக்கம் குறித்த அறிக்கை வெளியிடப்படுகிறது. இதில் இடம் பெற்றுள்ள புள்ளி விவரங்களில் இந்திய நகர்ப்புறங்களில் இந்த ஆண்டு ஜனவரி-மார்ச் காலாண்டில் வேலை  வாய்ப்பின்மை சதவீதம் 9.3 ஆக பதிவாகி உள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் வேலை  வாய்ப்பின்மை  9.8 சதவீதமாக இருந்தது. 15 முதல் 29 வயதுடைய இளைஞர்களின் வேலையின்மை விகிதம் ஜனவரி - மார்ச் காலாண்டில் 22.5 சதவீதமாக இருந்துள்ளது.

2018-ம் ஆண்டு அக்டோபர்- டிசம்பர் காலாண்டில் 23.20 சதவீதமாக இருந்தது.
நகர்புறங்களில் ஆண்களுக்கான வேலை வாய்ப்பின்மை  ஜனவரி - மார்ச் காலாண்டில் 8.7 சதவீதமாக இருந்துள்ளது. அதன் அளவு 2018 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 9 சதவீதமாக இருந்தது. அதேபோல் நகர்ப் புறங்களில் பெண்களுக்கு வேலையின்மை ஜனவரி - மார்ச் காலாண்டில் 11.6 சதவீதமாகவும், 2018 ஏப்ரல்- ஜூன் காலாண்டில் 12.8 சதவீதமாகவும் இருந்துள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google+ Linkedin Youtube