ஆப்கானிஸ்தானில் துப்பாக்கிச்சூடு: 24 தீவிரவாதிகள் மற்றும் 2 ராணுவ வீரர்கள் பலி

காபூல்,

ஆப்கானிஸ்தானின் தர்சாப் மாவட்டத்தில் தீவிராவாதிகளுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஆப்கான் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கையின் போது தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 24 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், ஆப்கான் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 2 வீரர்கள் உயிரிழந்ததாகவும் ஆப்கானிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் பொது மக்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. மேலும் பலியான தீவிரவாதிகளில் 8 பேர் தலீபான் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்படிருப்பதாகவும் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இது குறித்து தலிபான் தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Google+ Linkedin Youtube