சென்னை விமான நிலையத்தில் 31 பயணிகளிடம் இருந்து 6.5 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை, 

சென்னை விமான நிலையத்திற்கு இலங்கையில் இருந்து இன்று காலை வந்த விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து, மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் விமானத்தில் வந்த பயணிகளிடம்  சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது 31 பயணிகளிடம் இருந்து 6.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

ஒரே விமானத்தில் வந்த 31 பயணிகள் உரிய ஆவணங்கள் இன்றி தங்கம் கொண்டு வந்ததால், இதன் பின்னால் தங்கம் கடத்தும் கும்பல் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அந்த 31 பயணிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இலங்கையில் இருந்து நேற்று முன்தினம் சென்னை வந்த விமானத்தில் ஒரு பயணியிடம் இருந்து 1.4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Google+ Linkedin Youtube