திருப்தி தேசாய் வருகைக்கு பின்னணியில் சதி உள்ளது: கேரள அமைச்சர்

திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்வதற்காக இன்று காலை கொச்சி விமான நிலையத்திற்கு சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் தலைமையில்  பெண்கள் வந்தனர். சபரிமலை கோவில் செல்வதற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கொச்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் திருப்தி தேசாய் மனு கொடுத்தார். ஆனால், திருப்தி தேசாய்க்கு பாதுகாப்பு அளிக்க கேரள போலீஸ் மறுத்துவிட்டது. இதனால், தனது திட்டத்தை ரத்து செய்த திருப்தி தேசாய், விமானம் மூலம் புனேவுக்கு திரும்புகிறார்.

இந்த நிலையில், திருப்தி தேசாய் வருகை குறித்து கருத்து தெரிவித்துள்ள தேவசம் போர்டு அமைச்சர் கடகம் பள்ளி சுரேந்திரன் கூறியதாவது:- “ திருப்தி தேசாயும் அவரது குழுவினரும் சபரிமலை செல்வதற்காக கொச்சி வந்திருப்பதன் பின்னணியில் மிகப்பெரிய சதி இருக்கிறது. திருப்தி தேசாய் புனேவில் இருந்து வந்துள்ளார். அவ்விடங்களில் தான் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் மிகப்பரியெ சக்தியாக இருக்கிறது” என்றார்.

Google+ Linkedin Youtube