அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் -ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை,

இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏழு பேர் கொண்ட அரசியலமைப்பு வரைவுக் குழுவால் உருவாக்கப்பட்டு, 1949 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர் 1950 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்திய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டதன் 70-வது ஆண்டு தினவிழா இன்று கொண்டாட்டப்படுகிறது. இந்திய அரசியலமைப்பு சட்ட தினம், 2015-ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு சம அதிகாரம் உள்ளவாறு அரசியல் சட்டத்தை திருத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். சில நாட்களுக்கு முன்பு திமுக பொதுக்குழுவில் கூட்டாட்சி முறை குறித்து சிறப்பு தீர்மானம்  முன்மொழிந்ததை நினைவு கூர்ந்து மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Google+ Linkedin Youtube