நடிகர் ரஜினிகாந்தின் தர்பார் பட முதல் சிங்கிள் டிராக் வெளியீடு

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கல் ரிலீசாக வெளிவரவுள்ள ‘தர்பார்’ படத்தில் கதாநாயகியாக நயன்தாரா வருகிறார். யோகிபாபு, ஜட்டின் சர்னா, பிரதீப் கப்ரா, நிவேதா தாமஸ், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  அனிருத் இசையமைக்கும் ‘தர்பார்’ படத்திற்கு ரஜினியின் ‘தளபதி’க்கு (1991) பிறகு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். மும்பை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்து அதன் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்து உள்ளன. படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 7-ல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், ரஜினிகாந்தின் "தர்பார்" படத்தின் மோஷன் போஸ்டர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் ஆகிய 4  மொழிகளில் வெளியானது.

கடந்த 7ந்தேதி மாலை 5.30 மணியளவில் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. படத்தின் தீம் மியூஸிக்கும் வெளியானது.  இந்த போஸ்டரை தமிழிலில் கமல்ஹாசனும், தெலுங்கில் மகேஷ் பாபுவும், பாலிவுட்டில் சல்மான்கானும், மலையாளத்தில் மோகன்லாலும் வெளியிட்டனர்.

இந்நிலையில், தர்பார் படத்தின் முதல் சிங்கிள் டிராக் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. 'நெருப்பு பேரோட, நீ கொடுத்த ஸ்டாரோட' என்று பாடல்  தொடங்குகிறது. 'நான் தான்டா இனிமேலு, வந்து நின்னா தர்பாரு' என்றும் பாடல் வரிகள் உள்ளன. அனிருத் இசை அமைத்து, பாடலாசிரியர் விவேக் எழுதிய பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் அதிக உற்சாகம் அடைந்து உள்ளனர்.

Google+ Linkedin Youtube