ஆந்திராவில் திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகம் அமைக்க ஆந்திர அரசு திட்டம்

ஹைதராபாத்,

ஆந்திர பிரதேசத்தில் நவீன தொழில்நுட்பம் மற்றும் வளர்ந்து வரும் தொழில்துறைகளின் தேவைகளுக்கு ஏற்றவாறு திறன்களை வளர்த்துக் கொள்ள திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஆந்திர மாநில திறன் மேம்பாட்டுக் கழகம் தெரிவித்துள்ளது.

மேலும் ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதிக்கும் ஒரு மையம் என்ற வீதத்தில் மொத்தம் 25 திறன் மேம்பாட்டுக் கழகங்கள் அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஆந்திர மாநில திறன் மேம்பாட்டுக் கழகத்தின் அதிகாரிகள் விஸ்வர்கர்மா பல்கலைக்கழகம், பாரதிய பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகங்களுக்குச் சென்று அவை செயல்படும் முறை குறித்து ஆய்வு செய்துள்ளனர்.

இந்த திறன் மேம்பாட்டு மையங்களில் பயிற்சி பெறுபவதன் மூலம் ஆந்திர மாநில இளைஞர்கள், பெருநிறுவனங்களில் வேலையில் சேரும் வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Google+ Linkedin Youtube