உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரிய வழக்கில் நாளை காலை தீர்ப்பு

புதுடெல்லி

உள்ளாட்சி தேர்தலுக்கு தடைகோரி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனு மீதான விசாரணையின் போது,  பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து தேர்தல் நடத்த தயார் என்று தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது.

இந்த சூழலில், உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரிய வழக்கில், நாளை காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. இதனால், உள்ளாட்சி  தேர்தலுக்கு தடை விதிக்கப்படுமா? அல்லது தேர்தல் நடத்த அனுமதி  கிடைக்குமா? என்பது நாளை தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Google+ Linkedin Youtube