கரடியின் பிடியில் பங்குச் சந்தை - முதலீட்டாளர்களின் 1.41 லட்சம் கோடி ரூபாய் ஸ்வாஹா

டெல்லி: பங்குச் சந்தைகள் திங்கட்கிழமையன்றும் கரடியின் ஆதிக்கத்தில் பங்குச்சந்தை இருந்து வருவதால் சென்செக்ஸ் 31,626 புள்ளிகளிலும், நிஃப்டி 9,872 புள்ளியிலும் வர்த்தகம் முடிந்துள்ளது. வட கொரியா மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் ஆசிய சந்தைகளில் எதிரொலிக்கும் என்கிற அச்சம் முதலீட்டாளர்களிடையே நிலவுகிறது. கடந்த வாரத்தில் திங்கள் அன்று எந்த விதமான சாதகமான அம்சங்களும் இல்லாததால் சற்று தள்ளாட்டத்துடனேயே சிறிய ஏற்றத்துடன் முடிந்த இந்தியப் பங்குச் சந்தைகள் செவ்வாய்க் கிழமை முதல் ஒருவிதமான மந்த நிலையிலேயே வியாழக் கிழமை வரையிலும் வர்த்தகத்தை தொடர்ந்தன. இதனால், பெரும்பாலான பங்குச் சந்தை நிபுணர்களும், இனிமேல் சந்தை மேல் நோக்கிச் செல்ல சாதகமான அம்சங்கள் எதுவும் இல்லாததால் இறக்கத்தை நோக்கித்தான் செல்லும் என்று சொல்ல ஆரம்பித்தனர்.

Google+ Linkedin Youtube