சேரன், உதயநிதி, வைபவ் படங்கள் மோதல்திரைக்கு வரும் 6 புதிய படங்கள்

ரஜினிகாந்தின் தர்பார் படம் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 9-ந்தேதி திரைக்கு வந்தது. தனுசின் பட்டாஸ் படம் 15-ந்தேதி வெளியானது. அனைத்து திரையரங்குகளிலும் 2 படங்களும் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்த மாதம் இறுதியில் 6 படங்கள் திரைக்கு வருகின்றன.

வருகிற வெள்ளிக்கிழமை (24-ந்தேதி) உதயநிதியின் சைக்கோ, வைபவ்வின் டாணா ஆகிய 2 படங்களும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது சேரனின் ராஜாவுக்கு செக் படத்தையும் இதே நாளில் திரைக்கு கொண்டு வருகிறார்கள். 3 படங்களும் ஒரே நாளில் வெளியாகி மோத இருக்கின்றன.

சைக்கோ படத்தை மிஷ்கின் இயக்கி உள்ளார். இந்த படத்தில் இளையராஜா இசையில் உருவான தாய் மடியில் பாடல் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. கதாநாயகிகளாக அதிதிராவ் ஹைத்ரி, நித்யா மேனன் நடித்துள்ளனர். ராஜாவுக்கு செக் திகில் கதையம்சத்தில் தயாராகி உள்ளது. சாய் ராஜ்குமார் இயக்கி உள்ளார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு சேரன் நடிப்பில் இந்த படம் வருகிறது. டாணா படத்தில் வைபவுடன் யோகிபாபுவும் நடித்துள்ளார். வருகிற 31-ந்தேதி சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள சர்வர் சுந்தரம், டகால்டி ஆகிய 2 படங்கள் திரைக்கு வருகின்றன. இதே நாளில் அபிசரவணன், வெண்பா ஆகியோர் நடித்துள்ள மாயநதி படமும் திரைக்கு வருகிறது.Google+ Linkedin Youtube