ராமர் கோவிலுக்கு ரூ.1 கோடி நன்கொடை; சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் உள்ள ராம் லல்லாவுக்கு மராட்டிய முதல் மந்திரி மற்றும் சிவசேனா தலைவரான உத்தவ் தாக்கரே இன்று சென்றார்.  அவருடன் அவரது மகன் மற்றும் எம்.எல்.ஏ.வான ஆதித்ய தாக்கரே, சஞ்சய் ராவத் எம்.பி. ஆகியோர் உடன் சென்றனர்.

முதல் மந்திரி உத்தவ் தாக்கரே செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, ராம் லல்லாவின் ஆசிகளை பெற நான் இங்கு வந்துள்ளேன்.  பாகவா குடும்பத்தின் பல்வேறு உறுப்பினர்களை என்னுடன் நான் கொண்டுள்ளேன்.  கடந்த ஒன்றரை வருடங்களில் 3வது முறையாக நான் இங்கு வந்திருக்கிறேன்.  ஒவ்வொரு முறை வரும்பொழுதும் இனிமையான செய்தியே எனக்கு கிடைக்கிறது.  இன்று நான் வழிபடவும் செய்வேன் என கூறினார்.

அவர் தொடர்ந்து கூறும்பொழுது, மராட்டிய அரசில் இருந்து அல்ல, ராமர் கோவிலுக்கு எனது தொண்டு நிறுவனத்தில் இருந்து ரூ.1  கோடி நன்கொடை அளிக்கிறேன் என இன்று அறிவித்து கொள்ள விரும்புகிறேன்.

நான் பா.ஜ.க.விடம் இருந்து விலகி விட்டேன்.  இந்துத்துவாவில் இருந்து இல்லை.  பா.ஜ.க.வானது இந்துத்துவா இல்லை.  இந்துத்துவா என்பது வேறு விசயங்களை கொண்டது.  அதில் இருந்து நான் விலகவில்லை என்று கூறினார்.

Google+ Linkedin Youtube