யுனிலீவர், அமேசான், ஸ்விக்கி நிறுவன ஐ.டி. ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி

புதுடெல்லி,

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் அச்சத்தினால், தொழில்துறை அமைப்பான நாஸ்காம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது.  இதையடுத்து, அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் பணியாற்றும் பணியாளர்கள் ஏப்ரல் 30ந்தேதி வரை வீட்டில் இருந்து பணியாற்றலாம் என அறிவித்துள்ளது.

இதன்மூலம் சுமார் 20 லட்சம் பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற உள்ளனர்.  இதற்கிடையே இந்துஸ்தான் யுனிலீவர், அமேசான் மற்றும் ஸ்விக்கி உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் அலுவலக பணியாளர்களை வீட்டில் இருந்தே பணியாற்றும்படி கேட்டு கொண்டுள்ளது.

Google+ Linkedin Youtube