எனது கருத்தை பாமர மக்களுக்கும் கொண்டு சேர்த்தவர்களுக்கு நன்றி -ரஜினிகாந்த்

சென்னை

ரஜினிகாந்த் கடந்த வியாழக்கிழமை நிருபர்களுக்கு  அளித்த பேட்டியில் தனது எதிர்கால அரசியல் திட்டங்கள் பற்றி முதல் முறையாக வெளிப்படையாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.

மக்களிடம் ஆட்சி மாற்றத்திற்கான எழுச்சி தெரிந்தால் தான் அரசியல்  என ரஜினிகாந்த் கூறி உள்ளார்.அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் எனும் முழக்கத்தோடு ரசிகர்கள் மக்களை சந்திக்க வேண்டும் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

மாற்றம் ஏற்படும் என்று தெரியாமல் அரசியல் கட்சி துவங்கி என்ன பலன் என்று ரஜினி கேள்வி விடுத்தார்.அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம்... இப்போ இல்லன்னா இனி எப்பவும் இல்லை என கூறினார்.

தலைவரின் சொல்லை கேட்பவன்தான்  சிறந்த தொண்டன். வருங்கால முதல்வர் ரஜினி என்ற கோஷத்தை முதலில் நிறுத்துங்கள் என கூறி இருந்தார்

இந்த நிலையில் தனது கருத்தை பாமர மக்களும் பேசுகின்ற வகையில்  கொண்டு சென்றவர்களுக்கு ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் நன்றி தெரிவித்து உள்ளார்.

அவர் தனது டுவிட்டரில் 

அரசியல் மாற்றம்... ஆட்சி மாற்றம்
இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை
என்கிற கருத்தை பாமர மக்களும் பேசுகின்ற,சிந்திக்கின்ற வகையில் 
கொண்டு போய் சேர்த்த 
ஊடகங்களுக்கும்,பத்திரிகைகளுக்கும், சமூக வலைதளங்களுக்கும், மன்ற உறுப்பினர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.
 என தெரிவித்துள்ளார்.


Google+ Linkedin Youtube