கொரோனா வைரஸ் பயம்; பொது இடத்தில் தும்மிய நபருக்கு அடி உதை!

மும்பை,

கொரோனா வைரஸ் அச்சம் உலகம் முழுவதும் பீடித்து உள்ளது. இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுக்க மக்கள் மத்தியில் கொரோனா குறித்த அச்சம் எந்த அளவுக்கு உள்ளதை என்பதைக் காட்டும் வகையில், மராட்டியத்தில் ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளது. 

அதாவது, மராட்டியத்தின் குஜாரி பகுதியில் பொது இடத்தில் தும்மிய  நபருக்கு அடி விழுந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.சமூக வலைத்தளங்களில், வெளியான அந்தக் காட்சிகளில், இருசக்கர வாகனத்தில் வரும் நபர் ஒருவர், கைக்குட்டை, முகக்கவசம் எதுவும் இன்றி தும்மி விடுகிறார்.

இதைப்பார்த்த எதிரே வந்த வாகன ஓட்டி, முகத்தைத் துணியால் மறைக்காமல் ஏன் தும்முகிறீர்கள் என்று கேள்வி எழுப்புகிறார். இதனால் ஏற்பட்ட  கடும் வாக்கு வாதத்தையடுத்து , தும்மிய நபர் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.  எனினும், இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை வழக்கு எதையும் பதிவு செய்யவில்லை. 

Google+ Linkedin Youtube